பாராளுமன்றமும் நீரில் மூழ்குமா ?
தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் நாடாளுமன்ற வளாகம் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. நாடாளுமன்ற வளாகம் நீரில் மூழ்க இன்னும் ஒரு சில அடிகள் மட்டுமே உள்ளது என்று தெரிய வருகிறது.
இச்சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் கீழ் தளத்தில் உள்ள மேல் தளத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன. வெள்ளம் ஏற்பட்டால் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள குழு அறைகள் குறிப்பாக கீழே அமைந்துள்ள அறைகள் முதலில் வெள்ளத்தில் மூழ்கும் எனவே இங்குள்ள ஆவணங்கள் தளபாடங்கள் உபகரணங்கள் அகற்றப்படுகின்றன.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் தண்ணீர் புகாமல் தடுக்க மணல் மூட்டைகள் போடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தியவன்னா ஓயாவின் நீர் மட்டத்தை கண்காணிக்க கடற்படை குழுவொன்றும் அனுப்பப்பட்டுள்ளது.
