தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் முற்றாக நிறுத்தப்பட்ட போக்குவரத்து..!
கடுவெல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்பில் வாகனப் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீதி நீரில் மூழ்கியிருந்த வேளை முதலில் பகுதியளவில் மாத்திரமே போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது முழுவதுமாக ஸ்தம்பித்துள்ளது.
எனவே குறித்த பகுதியில் பயணிக்கும் வாகனங்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
