கற்பிட்டியிலும் தொடர் மழை வெள்ளத்தால் பாதிப்பு மின்சாரமும் தடைப்பட்டுள்ளது..!
தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக கற்பிட்டி பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காற்றின் காரணமாக கற்பிட்டி நகர மத்தியில் காணப்பட்ட பாரிய பல வருடங்கள் பழமை வாய்ந்த ஆலை மரம் சரிந்து பாதைக்கு குறுக்காக மின்சார கம்பத்தை உடைத்து பல பகுதிகளுக்கு செல்லும் மின் கம்பிகளையும் பாதிப்புக்குள்ளாக்கி வீழ்ந்துள்ளது. அதன் காரணமாக கற்பிட்டி நகர் முழுவதும் வெள்ளிக்கிழமை (28) காலை முதல் மின் தடைப்பட்டுள்ளது
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)


