இலங்கை மீட்பு பணிகளில் இந்திய ஹெலிகப்ட்டர்கள் தயார்..!
இலங்கையில் தீவிரமான காலநிலை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் “டிட்வா” புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன
இந்த நிலையில் விமானப்படை விமானங்கள் இந்த பணிகளில் மும்முரம் காட்டிவருகின்ற நிலையில் இலங்கைக்கு வருகைத்தந்து தற்போது கொழும்பில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியாவின் விமானம் தரையிறங்கும் கப்பல் INS Vikrant-இல் இருந்து ஹெலிகாப்டர்களை உதவிக்காக அனுப்ப இந்தியா இணங்கியுள்ளது
இந்த ஹெலிகாப்டர்கள் இலங்கையில் தொடர்ந்துவரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும் என்றும் கப்பலின் பொறுப்பாளரான கெப்டன் அசோக் தெரிவித்துள்ளார்.
( செய்தியாளர் அஷ்ரப் ஏ சமத் )
