தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு பூட்டு..!
நிலவும் மோசமான வானிலை காரணமாக மரங்கள் விழுந்ததால், தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்கா மற்றும் பின்னவல விலங்கியல் பூங்கா என்பன இன்று (28) மற்றும் நாளை (29) பொதுமக்களுக்கு திறக்கப்படாது.
இருப்பினும், பின்னவல யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவை தொடர்ந்து பொதுமக்களுக்கு திறந்திருக்கும்.
