முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பள்ளிவாசல்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை, வெள்ளம் மற்றும் கடும் காற்று காரணமாக பலர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் நாட்டிலுள்ள பள்ளிவாசல்களுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
“தங்கள் பள்ளிவாசல்களுக்கு உட்பட்ட மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளின் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை இனம் கண்டு தங்களால் முடியுமானவரை பாதுகாப்பான வகையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குமாறும் இவ்விடயத்தில் அரசினால் முன்னெடுக்கப்படும் வேலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்” என்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
