சீரற்ற வானிலையால் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இருநாட்கள் விடுமுறை
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்று (27) மற்றும் நாளை (28) ஆகிய இரு தினங்களும் நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெலவினால் ஒப்பமிடப்பட்ட கடிதம் நாடுபூராகவுமுள்ள மாகாண ஆளுநர்கள், தேசிய கல்வி நிறுவன பணிப்பாளர்கள் , பரீட்சை ஆணையாளர் போன்றோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

