உள்நாடு

வடமேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை

வடமேல் மாகாணத்தில் நிலவும் மோசமான காலநிலை (Adverse Weather Conditions) காரணமாக, மாகாண ஆளுநரின் பணிப்புரைக்கமைய, பின்வரும் இரு நாட்களுக்கு முஸ்லிம் பாடசாலைகளுக்கு (Muslim Schools) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 2025.11.27 (வியாழன்) மற்றும் 2025.11.28 (வெள்ளி) ஆகிய தினங்களில் இந்த அவசர விடுமுறை அறிவிப்பானது, மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே வழங்கப்பட்டுள்ளது.

இன்று (2025.11.27) காலையில் பாடசாலைக்கு வந்துள்ள மாணவர்கள் இருப்பின், பாடசாலை நிர்வாகம் உடனடியாகச் செயற்பட்டு, பாதுகாப்பான முறையில் அவர்களைப் வீடுகளுக்கு அனுப்பி வைக்க உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அவசர காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் அதிபர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஈடுசெய்யும் நாட்கள்:
இந்த இரு நாட்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலை நாட்களை ஈடுசெய்யும் திகதி (Compensatory School Days) பின்னர் அறிவிக்கப்படும்.

அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த அவசர அறிவிப்பிற்கு முழு ஒத்துழைப்பை வழங்குமாறு கோரப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *