நிலவும் சீரற்ற வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்வு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனர்த்தங்களினால் 20 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 1, 729 குடும்பங்களைச் சேர்ந்த 5, 893 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
