உள்நாடு

இந்திய கடற்படை கப்பல் கொழும்புத் துறைமுகம் வருகை

இந்தியா கடற்படையினரின் கப்பலான INS Vikrant Aircraft carrying Ship ஆர் 11 மூன்று நாட்கள் இலங்கை – இந்திய நல்லெண்ணத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை 22.11.2025 வந்தடைந்துள்ளது.

இன்று இக் கப்பல் தரிசித்து பார்வையிடுவதற்காக கொழும்பு பாடசாலை மாணவிகள் ஊடகவியலாளர்கள் கொழும்பில் வாழ் இந்தியர்கள் சிலர் கப்பலுக்குள் சென்று பார்வையிட்டனர். அத்துடன் கப்பலின் மேல் தளத்தில் 20 ஏயா கிராப்ட் , ஹெலிகொப்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவைகள் யுத்த காலத்தில் இவ் வானுர்திகள் , ஹெலிகொப்டர்கள் பயன்படுத்த கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 262 மீட்டர் நீளமும் 59 மீட்டர் உயரமும் கொண்ட கப்பலாகும்.

42,800 டொன்களாகும். 4 எரிவாயு கொண்ட என்ஜின் களாகும். அத்துடன் 8 -3 டீசல் ஜெனரேட்டர்கள் கொண்டவையாகும். அத்துடன் யுத்த ஆயுதங்கள் யுத்த விமானங்கள் கடலில் இருந்து தாக்கும் வல்லமை கொண்டது அத்துடன் விமானங்கள் தாக்கிவிட்டு மீள அக்கப்பலின் ஓடுபாதையில் இறங்கக் கூடிய வசதிகள் உள்ளன. என கட்டளைத் தளபதி ராமன் சிங் கேப்டன் அபினவ் குமார் ஆகியோர்களை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தேஷ் ஜா அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
இக் கப்பல் இலங்கையில் 22 – 26 நவம்பர் வரை தங்கி நிற்கும் அத்துடன் இலங்கை கடற்படை தளபதியும் இக் கப்பல் தரிசித்து பார்வையிட்டார்.

ஜ.என்.எஸ் விக்கிரான்ட் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது வானுர்தி தாங்கிய கப்பல் ஆகும். இக் கப்பல் இந்தியக் கடற் படை க்காக கொச்சி கப்பல் கட்டுமானத் தளத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இக் கப்பலை வடிவமைப்பு பணி 1999 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் கப்பலின் அடிப்பாகம் 2009 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 2013 ஆகஸ்ட் 12 இல் வெல்லோட்டம் விடப்பட்டது.

அதி நவீன முறையில் உருவாக்கப்பட்ட முதல் வானுர்தி தாங்கிய போர்க்கப்பலாக ஜ.என்.எஸ் விக்கிரான்ட் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 2022 வெல்லோட்டம் செய்யப்பட்டு இந்திய கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டது.

(அஷ்ரப் ஏ சமத் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *