சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் மரமொன்று முறிந்து பொது மதிலுக்கு பாரிய சேதம்
சாய்ந்தமருது எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயத்தில் தற்போது வீசிவரும் காற்றின் வேகம் காரணமாக பாடசாலையில் மரமொன்று முறிந்து விழுந்து பாடசாலை பொது மதிலை உடைத்து பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
பாடசாலை பொது மதில் உடைந்திருப்பதன் காரணமாக பாடசாலைக்கு பாதுகாப்பு என்பது குறைவாக உள்ளது.
பாடசாலையில் தற்போது நடப்பட்டுள்ள மரக் கன்றுகளுக்கும் பாதுகாப்பு கேள்விக் குறியாக உள்ளது.
பொது மதில் உடைந்துள்ளதால், ஆடு, மாடுகள் உட் சென்று அங்கு நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் மற்றும் பாடசாலையின் உடமைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலையும் காணப்படுவதாக பாடசாலையின் அதிபர் எம்.எஸ்.எம். ஆரிப் தெரிவித்துள்ளார்.
(எம்.எஸ்.எம். ஸாகிர்)
