புத்தளம் மன்னார் வீதி சாஹிரா கல்லூரிக்கு முன்னால் விபத்து
இரு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து சிறியரக வேன் ஒன்றுடன் மோதியதால் 17 வயது மதிக்கத்தக்க இரு இளைஞர்கள் கடும் காயங்களுக்கு உள்ளாகி புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
(24)திகதி இரவு 11.15 மணிக்கு புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரிக்கு முன்னால் சிறியரக வேன் திருப்ப முயற்சித்த போது மோட்டார் சைக்கிள் மோதிய சம்பவம் இடம் பெற்றுள்ளது , குறித்த இளைஞர்கள் இருவரும் தலைக்கவசம் அணியாமல் மிக வேகமாக பயணித்ததால் இச்சம்பவம் இடம் பெற்றதாக சம்பவத்தை நேரில் கண்டோர் தெரிவிக்கின்றனர்.இது குறித்து. மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(ஏ.என்.எம் முஸ்பிக்)
