பாலமுனை பாறூக் எழுதிய 51 இலங்கை நூல்கள் இரசனை வெளியீட்டு விழா
பாலமுனை பாறூக் எழுதிய “51 இலங்கை நூல்கள் இரசனை வெளியீட்டு விழா வழிப்பார்வை” நூல் வெளியீட்டு விழா அட்டாளைச்சேனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ் விஷேட அதிதியாகவும், உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி நஹீஜா முஸாபிர், கணக்காளர் எம்.எப். பர்ஹான், சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் ஆகியோர் முன்னிலை அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பாலமுனை பாறூக் பல்வேறு தலைப்புக்களில் பல நூல்களை கடந்த காலங்களில் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.






(ரிபாஸ்)
