எதிர்வரும் நாட்களில் வெள்ளப்பெருக்கு அபாயம்; நீர்ப்பாசனத் திணைக்களம்
வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று (25) முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென்,ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று (25) முதல் 30ஆம் திகதி வரையில் வெள்ளப்பெருக்கு அபாயம் இருப்பதால் முன்கூட்டிய எச்சரிக்கைகளைக் கருத்தில்கொண்டு, மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
