கிழக்கு பல்கலைக்கழக வைத்தியபீட மாணவன் மஸூத் விபத்தில் மரணம்
நேற்று (24/11/2025) மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் கிழக்கு பல்கலைக்கழக மருத்துவபீட நான்காம் வருட மாணவன் முஹம்மத் மஸூத் காலமானார்.
கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு சென்று வாழைச்சேனை நோக்கி வரும் வழியிலேயே இவ்விபத்தில் மரணமடைந்துள்ளார்.
23 வயதுடைய இவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன், மீராவோடையை பிறப்பிடமாகவும் வாழைச்சேனை ஹைராத் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
