அல்குர்ஆன் ஹிப்ளு போட்டி- 2025
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவராலயமும் மூன்றாவது முறையாகவும் இணைந்து நடாத்தும் அல்குர்ஆன் ஹிப்ளு போட்டி- 2025 கொழும்பு, கம்பஹா , களுத்தர, காலி, மாத்தர மற்றும் ஹம்பாந்தோட்ட ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி கொழும்பில் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள வளாகத்தில் கடந்த சனி ( 22) , ஞாயிறு (23) ஆகிய தினங்களில் இடம்பெற்றது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாசின் வழிநடத்தலில் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ்.அலா அஹமட் தலைமையில் இடம்பெற்றது
திணைக்களத்தின் அலுவளர்களான
ஏ.ஆர்.எ. ஹபீழ், எம்.ஐ. முப்தி முர்சி , எம்.ஐ.எம். மசீன், திருமதிகளான ஹைருன் ரபியுதீன், இனாயா அலி அக்பர், ஏ.சி.எப்.சாமிலா, ஏ.எச்.ஏ.என் பாத்திமா, ஏ.எஸ்.எம். ஜாவித், எம்.ஏ.சி.எம். றியாஸ் , எம்.என்.எம். றொஸான் மற்றும் தூதுவராலயத்தின் இலங்கைப் பிரதிநிகளின் பங்களிப்பில் இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளில் சுமார் 486 க்கும் மேற்பட்ட ஆண், பெண் போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேற்படி போட்டி நிகழ்வுகளை சமய கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் அவர்கள் வருகை தந்து போட்டி விடயங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






(எஸ்.எம்.ஜாவித்)
