உள்நாடு

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா

சுமார் 17 வருடங்களாக தலைநகரில் இயங்கி வரும் Amazon College & Campus கல்வி நிறுவனமானது, 23 நவம்பர் 2025 , மாலை 2 மணி முதல் BMICH – Lotus மண்டபத்தில் பிரம்மாண்டமான முறையில் தனது பட்டமளிப்பு விழாவை நடாத்தியது.

Diploma, HND, Degree, Masters ஆகிய நிலைகளில் கல்வி பயின்ற 200 மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றனர். இதில் Psychology, Business Management, IT, English, Teacher Training போன்ற துறைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக மானிய ஆணைகுழுவின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர், பேராசிரியர் Kshanika Hirimburegama பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேலும், மாண்புமிகு விருந்தினர்களாக
Mr. Khairul Iskandar Md. Yusof (Counselor, High Commission of Malaysia) மற்றும் Mr. Ali Shareef (Counselor, High Commission of Maldives) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

விசேட அதிதிகளாக,
Dr. Kumara Hirimburegama ( Former Vice Chancellor, University of Colombo), Prof. Prof. S.J. Yogarajah (Department of Linguistics
University of Kelaniya, Sri Lanka), Dr. Rishkan Basheer ( Associate Professor,Dean – School of Computing and informatics), Dr. U.L.M. Ashker (Assistant Professor, Postdoctoral Researcher, University of Malaya, Malaysia),
Mr. Rushdhie Habeeb (Head of Chamber & Counsil at Habeeb Associates), Dr. Ajay Prasad (Co-founder of Aienza Holdings (Pvt) Ltd, CEO of Global Medical Services (Pvt) Ltd), Mr. M.H.K.M. Hameez ( President – Sri Lanka Canada Business Council, University of Malaysia),
ஆகியவர்களும் கலந்துகொண்டனர்.

Amazon உயர் கல்வி நிறுவனமானது கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் மூன்றாம் நிலைய தொழில்துறை கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதியப்பட்ட நிறுவனமாகும்.இது சுமார் 17 வருடங்களாக உயர்கல்வி துறையில் பல ஆயிரக் கணக்கான மாணவர்களுக்கு கல்வி வழங்கி, பல்வேறு சேவைகளிலும் முன்னணி வகித்து வளர்ந்து வருகிறது. இதுவரை சுமார் 8 விருதுகளை பெற்றதுடன் இன்னும் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகளினால் அங்கீகாரமும் பெற்றுள்ளது. Amazon நிறுவனம் பம்பலப்பிட்டி காளி வீதியில், நான்கு மாடி கட்டடத்தில், அதிநவீன வசதிகளுடன் இயங்கி, கல்வித் துறையில் பல சேவைகளை வழங்கி வருகிறது என இந்நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் திரு இல்ஹாம் மரிக்கார் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *