கற்பிட்டியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற இலவச ஜனாஸா வாகனம் சமூக மயப்படுத்தும் நிகழ்வு
கற்பிட்டி வரலாற்றில் முதன் முறையாக கற்பிட்டி மக்களின் முழுமையான பங்களிப்புடன் பிரயிட் ஹேன்ட் ஜனாஸா சங்கத்தின் பல வருட முயற்சியின் ஊடாக தயார் செய்யப்பட்ட புதிய இலவச ஜனாஸா வாகனம் அதன் சேவையை சமூக மயப்படுத்தும் நிகழ்வு சனிக்கிழமை (22) மஸ்ஜிதுல் குபா ( காட்டு பாவா) பள்ளிவாசலில் ஜனாஸா சங்கத் தலைவர் ஏ.ஜே.எம். தாரிக் தலைமையில் நடைபெற்றது
இந் நிகழ்வில் அகில இலங்கை ஜனாஸா மற்றும் அவசர சேவைகள் சங்கத்தின் தலைவர் எம். காதர் மற்றும் பொதுச் செயலாளர் எம். ரியாத் ஆகியோருடன் ஏனைய மாவட்டங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜே. எம். பைசல் உட்பட கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினர்கள் , உலமாக்கள் மற்றும் ஊர் மக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அகில இலங்கை ரீதியிலான ஜனாஸா மற்றும் அவசர சேவைகள் சங்கத்தின் மேற்பார்வையின் கீழ் நாடு பூராவும் இதுவரை 93 ஜனாஸா வாகனங்கள் காணப்படும் நிலையில் கற்பிட்டியின் ஜனாஸா வாகனம் 94 வது வாகனமாக இச்சேவையில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.






(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
