கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளராக எம்.பி.எம். முபாறக்
மூதூர் பிரதேச செயலாளராக சுமார் ஐந்தாண்டுகள் கடமையாற்றிய எம்.பீ.எம். முபாரக் இன்று (24/11/2025) முதல் மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலாளராக கடமையைப் பொறுப்பேற்கிறார்.
மூதூர் பிரதேச செயலகத்தில் உதவிபபிரதேச செயலாளராக கடமையில் இணைந்து கொண்ட முபாரக், பிரதேச செயலாளராக தரமுயர்வு பெற்று சுமார் ஏழு வருடங்கள் மூதூர் பிரதேச மக்களுக்கான அளப்பரிய சேவைகளை பக்கச்சார்பற்ற வகையில் மிகச்சிறப்பாக ஆற்றியுள்ளார்.
மூதூர் சமூகம் மற்றும் உத்தியோகத்தர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப்பெற்ற பிரதேச செயலாளர், மூதூர் பிரதேச அபிவிருத்தியில் மட்டுமின்றி, மக்களின் கல்வி, பொருளாதார, சமூக, கலாசார, சமய மேம்பாட்டிலும் மிகுந்த கரிசணையுடன் உழைத்ததோடு, அனைத்தின சமூகங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுவதிலும் மிகுந்த கவனஞ்செலுத்தினார்.
பிரதேசத்தின் வளங்களையும், பொதுச்சொத்துக்களையும் பாதுகாப்பதில் பல்வேறு சவால்களையும் வெற்றியோடு எதிர்கொண்ட பிரதேச செயலாளருக்கு மூதூர் மக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் தங்களது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
