கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி அதிபர் சங்கம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு சனிக்கிழமை (22) பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அதிபர் சங்க தலைவரும் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய அதிபருமான எம்.எல்.பைசல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வு பெற்றுச் சென்ற நான்கு அதிபர்கள் நினைவுச் சின்னம், பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதில், கேணிநகர் மதீனா வித்தியாலயத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற ஏ.எல்.மீரா முகைதீன், காகித நகர் மில்லத் வித்தியாலயத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற எச்.எம்.இஸ்மாயில், மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற எம்.எம்.மஹ்ரூப், ஓட்டமாவடி ஹிஜ்றா வித்தியாலயத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்ற எம்.ஏ.சாபிர் ஆகிய நான்கு அதிபர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில், பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப் பணிப்பாளரும் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்வி அலுவலக பதில் பணிப்பாளருமான ஏ.ஜே.மர்சூக் கலந்து கொண்டார்.




(எச்.எம்.எம்.பர்ஸான்)
