உள்நாடு

அத்தனகல்ல ஓயாவை அண்மித்த பிரதேசங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, அத்தனகலு ஓயா வடிநிலத்தின் (Attanagalu Oya Basin) பெரும்பாலான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அத்தனகல்ல ஓயாவின் தற்போதைய மழை நிலைமை மற்றும் நீரியல் நிலையங்களின் (Hydrological Stations) ஆற்று நீர் மட்டங்களை பகுப்பாய்வு செய்கையில், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் பின்வரும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள அத்தனகலு ஓயா மற்றும் உருவல் ஓயா (Uruwal Oya) பள்ளத்தாக்குகளின் சில தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன:

  • திவுலபிட்டிய (Diwulapitiya)
  • மீரிகம (Mirigama)
  • அத்தனகல்ல (Attanagalla)
  • மஹர (Mahara)
  • கம்பஹா (Gampaha)
  • மினுவாங்கொட (Minuwangoda)
  • ஜா-எல (Ja-ela)
  • கட்டான (Katana)
  • வத்தளை (Wattala)

இந்த நிலைமை காரணமாக, இந்த தாழ்வான பகுதிகள் ஊடாகச் செல்லும் சில வீதிகள் சில இடங்களில் நீரில் மூழ்கும் சாத்தியம் உள்ளது.

ஆகவே, இப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் செல்லும் வாகன சாரதிகள் இது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இது தொடர்பில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகார சபையினர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வெளியிட்டது: நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு

வெளியிடப்பட்ட நேரம்: 2025 நவம்பர் 23, காலை 6.00 மணி

செல்லுபடியாகும் காலம்: 2025 நவம்பர் 24, காலை 6.00 மணி வரை.

(ரிஹ்மி ஹக்கீம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *