மீராவோடை மீரா ஜும்மா பள்ளிவாயல் நிருவாகத்துடன் பிரதேச சபை உறுப்பினர் சந்திப்பு
ஒரு மனித செயற்பாட்டிற்கு இதயம் மற்றும் மூளை முக்கிய பங்கு வகிப்பதைப் போன்று, ஒரு சமூகத்தின் செயற்பாட்டிற்கு பள்ளி வாயலும் பாடசாலையும் காணப்படுகின்றது என்று நூர்தீன் பாஹிர் தெரிவித்தார்.
அரசியல் அதிகாரம் கிடைத்த பின் முதலாவது சந்திப்பாக மீராவோடை மீரா ஜும்மா பள்ளி வாயல் நிருவாகத்தை நேற்று (22/11/2025) இரவு பள்ளிவாயலில் சந்தித்தார்.
இச் சந்திப்பின் போது தனது அரசியல் பிரவேசம் அதன் நோக்கம் பற்றியும், சமூக நல விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியதுடன் பள்ளிவாயல் நிருவாகத்தோடு சேர்ந்து செயற்படுவது பற்றியும் உறையாடியதாக அவர் தெரிவித்தார்.
(எஸ்.எம்.எம். முர்ஷித்)
