கொழும்பு சிலாபம் பிரதான வீதியின் கொச்சிக்கடையில்விபத்து ஒருவர் பலி
சீமெந்து தூள் ஏற்றிச் சென்ற கனரக வாகனத்துடன் முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொச்சிக்கடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு-சிலாபம் பிரதான வீதியில் கொஞ்சிக்கடை எனும் இடத்தில் சனிக்கிழமை (22) இரவு 10.00 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
கொச்சிக்கடை – மனவேரிய பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் யோகராஜா (வயது 54) என்பவர் உயிரிழந்துள்ளார். இவர் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய முச்சக்கர வண்டியில் மேலும் இருவர் பயணித்ததுடன், அவர்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சீமெந்து தூள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வேலையில் கொச்சிக்கடை நகரின் பிரதான வீதியில் வந்த முச்சக்கர வண்டி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்து குறித்த கனரக வாகனத்தின் மீது மோதியதுடன் முச்சக்கர வண்டியின் ஓட்டுநர் வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு, குறித்த கனரக வாகனத்தால் நசுக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்
விபத்துடன் தொடர்புடைய கனரக வாகனம் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள துடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சிக்கடை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி அனுராத தேசப்பிரியா தலைமையிலான அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
