கண்டி நகரில் யாசகர் பிரச்சினைக்கு தீர்வு காண கலந்துரையாடல்
கண்டி நகரில் நிலவும் யாசகர்கள் பிரச்சினைக்குதீர்வு வழங்குவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ்.பி.எஸ். அபயகோன் அவர்களின் தலைமையில், ஆளுநர் அலுவலக கேட்போர் கூடத்தில் (18) நடைபெற்றது.
கலந்துரையாடலின்போது, கண்டி நகரிலுள்ள மணிக்கூட்டுக்கோபுர பேருந்து நிலையம், டொரிங்டன் பூங்கா உட்பட நகரத்தின் பல இடங்களில் தங்கியுள்ள யாசகர்களை குறித்து குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது.
அந்த இடங்களில் இருந்து யாசகர்களை அகற்றுதல், அதற்காக மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள்/திருத்தங்கள் (Remedies), குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளை வழங்குதல், மற்றும் நகரத்திற்கு வரும் மக்களுக்கு வசதிகளை வழங்குதல் போன்றவை குறித்து பேசப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்தில் கண்டி பிரதி மேயர் ருவன் கலப்பிட்டிய, மத்திய மாகாண பிரதம செயலாளர் அஜித் பிரேமசிங்க, ஆளுநரின் செயலாளர் மஞ்சுலா மத ஹபொல, பிரதம மற்றும் கல்வி அமைச்சு செயலாளர் மதுபாணி பியசேன, மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த, மத்திய மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.எல். ரணவீர, மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமில அத்தபத்து, கண்டி மேலதிக மாவட்ட செயலாளர் லலித் அட்டம்பாவல, ஆளுநரின் உதவிச் செயலாளர் வருண மியனதெனிய, கண்டி மாநகர ஆணையாளர் இந்திகா குமாரி அபேசிங்க, கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அகில கருணாரத்ன ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



(எம்.ஏ.அமீனுல்லா)
