இன்றிரவு முதல் ஜுமாதுல் ஆகிரா மாதம் ஆரம்பம்
ஹிஜ்ரி 1447 ஜுமாதல் ஆகிரா மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு நேற்று நவம்பர் மாதம் 21 ஆம் திகதி மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
பிறைக் குழு தலைவர் மெளலவி MBM ஹிஷாம் அல் பத்தாஹி தலைமையில் இடம்பெற்ற மாநாட்டில்
ஜுமாதல் ஆகிரா மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எப்பாகத்திலும் தென்படாத காரணத்தினால் இன்று ( 22) மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு ஜுமாதல் ஆகிரா மாதம் ஆரம்பமாகின்றது என
இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு பிறைக் குழுத் தலைவர் உத்தியோக பூர்வமாக அறிவித்தார்.
கொழும்பு பெரிய பள்ளிவாசலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறை பார்க்கும் மாநாட்டில் பெரிய பள்ளிவாசலின் தலைவர் தாஹிர் ரசீன் உள்ளிட்ட பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள், பிறைக் குழு உறுப்பினர்கள் , அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பிறைக்குழு செயலாளர் மெளலவி அஷ்ஷெய்க் மபாஹிம் உள்ளிட்ட உலமா சபை உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் வக்பு பிரிவு பொறுப்பாளர் ஏ.எஸ்.எம்.ஜாவித் இலங்கை வளிமண்டல திணைக்கள அதிகாரி மொகமட் ஸாலிகீன் , மற்றும் ஏனைய பள்ளி வாசல்கள், ஸாவியாக்கள் , தரீக்காக்களின் பிரதிநிதிகள், மேமன் சங்க பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
