உள்நாடு

பேருவளை கெச்சிமலை தர்காவில் புனித புஹாரி – முஸ்லிம் தமாம் மஜ்லிஸ்

வரலாற்று பிரசித்தி பெற்ற பேருவளை கெச்சிமலை தர்ஹாவில் நடைபெற்று வரும் வருடாந்த புனித ஸஹீஹல் புஹாரி, ஸஹீஹல் முஸ்லிம் மற்றும் மஷ்ரவுர்ரவி ஆகிய ஹதீஸ் கிரந்தங்களின் பராயன மஜ்லிஸின் தமாம் வைபவம் எதிர் வரும் 23 ஆம் திகதி (23.11.2025) ஞாயிற்றுக் கிழமை காலை சங்கைக்குறிய அஷ் ஷெய்ஹ் மௌலவி ஸக்கி அஹமத் (அஷ்ரபி) பின் அஷ் ஷெய் முஹம்மத் காலிப் அலவி ஆலிம்; அலவியதுல் காதிரி தலைமையில் நடைபெறுவதை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.

இலங்கையில் வியாபாரத் தொடர்பு கொண்டிருந்த அராபிய நாட்டு முஸ்லிம்களின் ஆரம்பக் குடியேற்றம் சரித்திரப்பிரசித்திபெற்ற பேருவளை கெச்சிமலை கடற்கரைப் பகுதியில் தான் இடம்பெற்றது என்பது பல சரித்திர ஆய்வாளர்களின் கருத்தாகும்.

கி.பி 11 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர்கள் இலங்கையில் குடியேறி வாழ்ந்தார்கள். இன்றும் பேருவளை கடற்பாங்காவுள்ள கெச்சிமலைப் பள்ளிவாசல் இலங்கையில் முஸ்லிம்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு சான்றாகவுள்ளது என்றும் பட்டுப் பாதையூடாக பிரயானம் செய்த “ஆம்கோவேல்ட்” நிறுவனத்தின் பிரபல பத்திரிகையாளர்களான டேவிட், ஆம்டிட் குழுவினரின் ஆய்வறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.

இறைநேசச் செல்வர்கள், நல்லோர்கள் வழியில் மக்களுக்கு அறிவுரை வழங்கி தாங்களும் வாழ்ந்து காட்டி மனித சமுதாய மறுமலர்ச்சிக்காக உழைத்தார்கள். இத்தகைய ஸ_பியாக்கள் பலரும் இலங்கைக்கு வருகை தந்து பாவா ஆதம் (அலை) என்று அழைக்கப்படும் புனித தளத்தை தரிசித்து சென்ற வரலாற்று உள்ளது.

இப்னு பதூதா போன்ற வரலாற்று வல்லுனர்கள் சில்க்வழி வந்து தரிசித்து தங்களது வரலாற்று நூலில் குறித்துள்ளது வியக்கத்தக்கது.

கெச்சிமiiயில் அடங்கியுள்ள செய்னு அஷ்ரப் வலியுள்ளாஹ் அவர்கள் இதே நோக்கத்துதோடு தான் கப்பல் மூலமாக இலங்கை வந்தார்கள். கடலின் அகோரமும், காற்றின் யோகமும் கப்பலை திசை திருப்பி மெச்சுப் புகழ் கெச்சிமலை அன்மித்தே பேருவளையில் இறங்கச் செய்தது. அல்லாஹ்வின் நாட்டம் இதுவாக இருக்கலாம் என உணர்ந்த அல்லாஹிவின் அன்பர் அஷ்ரப் வழியுள்ளாஹ் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார்கள். அங்கிருந்து இறைபணியைத் தொடர்ந்தார்கள். ஆத்மீக மலர்ச்சி கண்டார்கள்.

1882 ஜோஜ் அரசின் (வாந 6வா மiபெ புழசபந) இன் கவர்னராக இலங்கையில் கடமையாற்றிய சேர் ஆதர் ஹென்றி கோடன் (ளுசை யுவாயச ர்நசெல புழசனநn) அவர்கள் காலிக்கு தன்னுடைய உத்தியோக கடமைக்காகச் செல்லும் வழியில் அவர் பயணம் செய்த குதிரை வழி தவறி பேருவளை சுங்கப் பாதை (ஊரளவழஅள சுழயன) வழியில் சென்று ஓர் இடத்தில் தறித்து நின்றது. அங்கு இருந்த ஒரு பழைய புதைகுழியின் அருகில் நின்று பணிந்து வணங்கியது.

இந்த ஆச்சரியமான சம்பவம் கவர்னரை சிந்திக்கச் செய்தது குதிரை அந்த இடத்தை விட்டும் அசைய மருத்தது. அங்குள்ள மக்களிடம் கவர்னர் விசாரித்ததில் இந்த இடம் கெச்சிமலை என்றும் அடங்கப்பட்டிருக்கும் அற்புதமான வழியுள்ளாஹ் பற்றியும் கூறப்பட்டது. உடனே கவர்னர் அவர்கள் தன்னுடைய காரியதரிசியிடம் ஜோஜ் அரசின் சார்பில் இந்த இடத்தை அன்பளிப்பாக வழங்கும்படி உத்தரவிட்டார்கள். பின்னர் மக்கள் ஒன்று சேர்ந்து கெச்சிமலை உருவாக்கினார்கள். இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பத்திரத்திற்கான ஆவணம் காலம்சென்ற சங்கைக்குறிய அஷ் ஷெய்ஹ_ ஹம்ஸா பின் முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் அலவியதுல் காதிரி அவர்கள் வசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

15 ஆம் நூற்றாண்டில் கி.பி 1474 எலெக்ஸ் ஸான்டியாவில் அமைக்கப்பட்ட ஸ_ல்தானுல் அஷ்ரப் அல் கீதாயின் பள்ளிவாசலை போன்று கெச்சிமலை தர்ஹாவில் கலை அமைப்பு பெரிதும் ஒத்தியிருக்கின்றது. எனினும் அதன் உருவ அலங்காரங்களும், அலகிய மாடங்களும், கோபுரங்களும் இங்கு இல்லை. மூன்று திசைகளினாலும் கடலினால் சூழப்பட்ட இயற்கைக் காட்சிகள் இதன் சிறப்பம்சமாகும் இதன் தலைவாயில் பக்க வாயில் பெரிதும் தென்னிந்திய முறையில் அமைந்துள்ளன. இக்கட்டிடம் ஹிஜ்ரி 1327 ஆம் ஆண்டு நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

புகாரி முஸ்லிம் மஜ்லிஸ்

அல் ஆலிம் அஷ் ஷெய்கு இஸ்மாயில் (ரஹ்) ஹிஜ்ரி 1315 இறையடி சேர்ந்தார்கள் அவர்களது புதல்வர் அஷ் ஷெய்கு முஹம்மத் அப்துல்லாஹ் ஆலிம் மூலம் (1878 – 1952) புனித புகாரி பராயன மஜ்லிஸ் இங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஹைதராபாத் நிஸாம் மன்னரின் அவையில் ஷெய்காக இருந்தவரே அஷ் ஷெய்ஹ_ அஹமத் இப்னு அப்துல்லாஹ் பாபஹ்ஹி மௌலானா அவர்கள். அன்னார் புனித புகாரிக் கிரந்தத்தை ஹிஜ்ரி 1321 ஆம் ஆண்டு கெச்சிமலை தர்காவில் அஷ் ஷெய்ஹ_ அப்துல்லாஹ் ஆலிம் அவர்களுக்கு ஓத உத்தரவளித்தார்கள் இதனுடன் முஸ்லிம், மஷ்ரவுர்ரவி ஹதீஸ் கிரந்தங்களும் பராயனம் செய்யப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை தவிர இந்த புனித மஜ்லிஸ் தினமும் அதிகாலை தஹஜ்ஜத் தொழுகையுடன் ஆரம்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மர்ஹம் அஷ் செய்ஹ ஹம்ஸா ஆலிம் அவர்கள் இதற்கு தலைமை தாங்கி நீண்ட காலம் மஜ்லிஸை நடர்ததி வந்தார்கள். அவர் மறைவுக்கு பின்னர் அஷ் ஷெய்க் மர்ஹம் ஷகைப் ஆலிம் தலைமை தாங்கி நடாத்தினார்கள் அதற்குப்பின்னர் அவர்களது சகோதரரான காலிப் அலவி ஹாஜியார் அலவியதுல் காதிரி அவர் மறைவுக்கு பின்னர் தற்போது அவரது புதல்வர் சங்கைக்குறிய மௌலவி ஸக்கி அஹ்மத் (அஷ்ரபி) பின் அஷ் ஷெய்க் காலிப் அலவி ஹாஜியார் தலைமை தாங்கி நடாத்தி வருகிறார்கள்.

இஷாஅதுல் இஸ்லாம் அனாதை இல்லம்

1974 ஆம் ஆண்டு மர்ஹ_ம் செய்கு ஹம்ஸா ஆலிம் அவர்கள் களுத்துறை மாவட்ட கல்வி மான்கள், கொடைவள்ளல்கள், அறிஞர்கள்,உலமாக்கள், சிந்தனையாளர்கள் அனுசரனையுடன் தர்கா நகரில் இஷாஅதுல் இஸ்லாம் என்ற பெயரில் அனாதை சிறார்களுக்காக ஓர் இல்லத்தை உறுவாக்கினார்கள் இன்று இந்த நிலையம் மிகவும் விசாலமாகி பெறுமலவிலான அனாதைச் சிறார்கள் பராமரித்து வருகிறது. கல்வி , ஆத்மீகக் கல்வி கைத்தொழில், தொழில் நுட்பக் கல்வி என்பன இந்த சிறார்களுக்கு வளங்கப்படுகிறது.

1989 ஆம் ஆண்டு கெச்சிமலை தர்காவில் அல் குல்லியதுல் அஷ்ரபிய்யா அரபுக் கலாபீடம் அமைக்கப்பட்டதுடன் களுத்தறையில் மின்னதுல் ஹஸனிய்யா அரபுக் கல்லூரியும் ஆரம்பிக்கப்பட்டது. கெச்சிமலை தர்கா வளவில் இஸ்லாமிய கலை வனப்புடன் கம்பீரமாக காட்சியளிக்கும் அல் அஷ்ரபிய்யா அரபுக் கல்லூரி சமூகத்திற்கும் நாட்டிற்கும் பல புத்திஜீவிகளை உருவாக்கி வருகிறது.

கெச்சிமலை புகாரி மஜ்லிஸின் வியாபித்த சேவைகள் அனந்தம் என்று கூறலாம். சேஹ_ அப்துல்லாஹ் ஆலிம் அவர்கள் ஒருநாள் உபதேசம் தலைசிறந்த அரபுக் கல்லூரி ஒன்றை உருவாக்கியது. கொடைவள்ளலான எம்.டி.எச் அப்துல் கபூர் ஹாஜியார் இம்மஜ்லிஸில் கேட்ட உபதேசத்தால் மஹரகமையில் கபு}ரியா அரபுக் கல்லுஸரியை நிர்மானித்தார்கள்.

கெச்சிமலை புகாரி மஜ்லிஸின் விலைவாள் பிற்காலத்தில் இரண்டு புகாரி மஜ்லிஸ்கள் தோற்றம் பெற்றன. மூதூர் கின்யா புஹாரி மஜ்லிஸ் தென்னிந்தியா காயல்பட்டம் புகாரி மஜ்லிம் ஆகியனவே அவையாகும்.

2004 ஆம் ஆண்டு சுனாமி கடற்கோள் அனர்த்தம் பேருவளை கடற்கரைப்பகுதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்திய போதும் கூட மூன்று பக்கங்களாளும் கடலினால் சூழப்பட்டுள்ள இந்த தர்காவுக்கு எந்த விதச் சேதமும் பாதிப்பும் ஏற்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அல்லாஹ்வின் மகத்தும் இறங்கும் புனித புகாரி மஜ்லிஸ் நடைபெறும் இந்த தர்காவில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளமை மறைக்கமுடியாத மறுக்கமுடியாத உண்iயாகும். வரலாற்றுப் பிரசதித்தி பெற்ற இந்த தர்காவை தரிசிப்பிதற்காக தினமும் பெறு எண்ணிக்கையான உள்சாட்டு வெளிநாட்டு முஸ்லிம்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

22 ஆம் திகதி இரவு கத்தாத் ராதிப், விஷேட மார்க்கச் சொற்பொழிவு அதனையடுத்து தர்காவில் அடங்கப்பட்டுள்ள அஷ் ஷெய்க் அஷ்ரப் வலியுல்லாஹ் (|ரஹ்) ஸியாரத் நிகழ்ச்சியும் இடம்பெறும் 23 ஆம் திகதி அதிகாலை அல் குர்ஆன் தமாம் வைபவம் நடைபெறும்.

தமாம் நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி முஸ்லிம் சேவை 74 ஆவது வருடமாகவும் நேரடியாக அஞ்சல் செய்யும்.

(பேருவளை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *