அரசாங்கத்தால் உத்தரவாத விலைகள் போலவே உர மானியங்களைக் கூட முறையாக பெற்றுக் கொடுக்க முடியாதுபோயுள்ளன; எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களுக்கு நியாயமான உத்தரவாத விலைகளை எதிர்பார்த்தாலும், இந்த அரசாங்கத்தால் கடந்த காலத்திலும் போலவே இன்றேனும் கூட இந்த உத்தரவாத விலைகளை நிர்ணயித்துக் கொடுக்க முடியாதுபோயுள்ளன. வெங்காயம், பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு, வட்டக்காய், நெல் உள்ளிட்ட பல உற்பத்திகளுக்கு அரசாங்கத்தால் உத்தரவாத விலைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாதுபோயுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
உர மானியமும் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைத்தபாடில்லை. நாம் பேசும் இத்தருணத்தில் பெரும் போகச் செய்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உர மானியம் கிடைக்காமையால் விவசாயிகள் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். எனவே, இந்த உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சமயத்திலேயே இந்த உர மானியத்தை பெற்றுக் கொடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேட்டுக்கொண்டார்.
