நீரிழிவு தின கவிதைப் போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றார் கற்பிட்டி அப்துல்லாஹ்
2025 ம் ஆண்டின் நீரிழிவு தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் தரம் 04 ல் கல்வி பயிலும் மாணவன் எம்.ஏ அப்துல்லாஹ் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
அகஞ்சுரக்கும் தொகுதி மற்றும் நீரிழிவு கூட்டமைப்பு இணைந்து நடாத்திய இப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது இதில் கற்பிட்டி அப்துல்லாஹ் தங்கப்பதக்கம், பணப்பரிசில்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இவர் கற்பிட்டியைச் சேர்ந்த ஆசிரியர்களான எம். எம். எம். அஜ்மல் மற்றும் ஆர்.எஸ். ஷகீலா ஆகியோரின் மூத்த புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
