உள்நாடு

பேருவளையில் இலவச மருத்துவ முகாம்

பேருவளை நகர சபை உறுப்பினர்கள் ஷாஹீத் அஹமட் மற்றும் மல்லிக்கா ஜயந்தி டி சில்வா ஆகியோரின் ஏற்பாட்டில், ஸ்ரீ ஷைலாபிம்பாராம விகாரையில் இலவச மருத்துவ முகாம் 15/11/2025 சிறப்பாக நடைபெற்றது.

இந்த முகாமில் மாண்புமிகு எம்.பி. சந்திம ஹெட்டியாரச்ச்சி, பேருவளை நகர பிதா மஃபாஸிம் அஸாஹிர் , பேருவளை காவல் நிலைய பொருப்பதிகாரி திரு நவரத்ன, MUGP International Director, CGJTA & GEM SRILANKA நிர்வாக செயலாளர் மஃபாஸ் மஷ்ஹூர் உள்ளிட்ட பல முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

கண் பரிசோதனை, பல் சிகிச்சை, ஆயுர்வேத ஆலோசனை, ஆங்கில மருத்துவம், சர்க்கரை–கொலஸ்ட்ரால் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டன.

100ற்கு மேற்பட்ட மருத்துவக் குழுவினர் பங்கேற்று, 600-க்கும் மேற்பட்ட மக்கள் இந்த முகாமின் மூலம் பயனடைந்தனர்.

சமூக நலனைக் குறிக்கோளாக கொண்டு நடைபெற்ற இந்த முகாம், உள்ளூர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

(பேருவலை பீ.எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *