முக்கோண ரி20 தொடரில் இலங்கை அணியில் வியாஸ்காந்
பாகிஸ்தானில் இடம்பெறும் முத்தரப்பு ரி20 தொடருக்கான தேசிய அணியில் இளம் தமிழ்பேசும் சுழல்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந் இணைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினர் அறிவித்துள்ளது.
ஆசியக்கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் இலங்கை ‘ஏ’ அணிக்காக விளையாடிய வியாஸ்காந் இதுவரையில் 2 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள நிலையில் போட்டிகள் இடம்பெறும் கட்டாரில் இருந்து நேரடியாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட தொடை தசை இறுக்கத்திலிருந்து வனிந்து ஹசரங்கா இன்னும் முழுமையாக குணமடையாததால், பாகிஸ்தான், சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் பங்கேற்கும் முக்கோண ரி20 தொடருக்கு இலங்கை தேசிய அணிக்கு வியாஸ்காந்த் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
