ஈட்டி எறிதல் போட்டியில் 3ஆவது இடத்தினைப் பெற்றார் கஹட்டோவிட்ட பைசல்
கடந்த 08 ஆம் திகதி நடைபெற்ற தேசிய இளைஞர் விளையாட்டு விழாவின் கம்பஹா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான போட்டியில் கஹட்டோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த பைசல் ஈட்டி எறிதல் போட்டியில் மூன்றாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.
கஹட்டோவிட்ட மேற்கு (369/ஏ) கிராம உத்தியோகத்தர் பிரிவின் யுனைடட் யூத் இளைஞர் கழகத்தினை பிரதிநிதித்துவம் செய்து மூன்றாவது இடத்தை தனதாக்கிக் கொண்ட பைசல் மேல் மாகாண மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.
(கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)
