அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினுடைய “செயலகச் செய்திகள்” சஞ்சிகை வெளியீட்டு
அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினுடைய “செயலகச் செய்திகள்” எனும் தலைப்பில் சஞ்சிகை வெளியீட்டு விழா பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர் தலைமையில் நேற்று (17) நடைபெற்றது.
உதவி பிரதேச செயலாளர் சட்டத்தரணி பா. நஹீஜா முஸபீர் சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக கொண்டு வெளியீட்டு வைக்கப்பட்ட இந் நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.ஏ.றஸாக் திறனாய்வு உரையினை நிகழ்த்தினார்.
பிரதேச செயலகப் செய்திகள் சஞ்சிகையில் வாழ்த்துச் செய்திகள், கட்டுரைகள், அலுவலக நடைமுறை விதிகள், உத்தியோகத்தர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஆக்கங்கள், மற்றும் கவிதைகள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளன.
நிகழ்வில் கணக்காளர் எம்.எப். பர்ஹான்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜெளபர், நிருவாக உத்தியோகத்தர் கே. பீ. சலீம், கிராம நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ. எஸ்.நியாஸ்,பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் காரியாலய உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.






(றிபாஸ்)
