2026 வரவு செலவு திட்டம்; குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமானது
2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் இன்று (15) முதல் 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
வரவு – செலவு சட்ட மூலத்துடன் தொடர்புடைய குழுநிலை விவாதம் டிசம்பர் மாதம் 05ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.
அரசாங்க விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர்த்து ஏனைய நாட்களில் இவ் விவாதம் நடைபெறும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 05ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
கடந்த 7ஆம் திகதி 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
தொடர்ந்து வரவு – செலவு திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் நேற்று வரை நடைபெற்றதோடு, மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 160 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் அளிக்கப்பட்டதோடு, 8 பேர் வாக்களிப்பிலிருந்து விலகினர்.
அதன்படி 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
