உள்நாடு

போதைக்கெதிரான விழிப்புணர்வு ஜும்ஆ பிரசங்கங்களை நிகழ்த்துமாறு வக்பு சபை வேண்டுகோள்

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு குத்பாப் பிரசங்கங்களை செய்தல், வெள்ளிக்கிழமைகளில் ஜூம்ஆ பிரசங்கத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக போதைப் விழிப்புணர்வு குத்பாப் பிரசங்கங்களை செய்யுமாறு இலங்கை வக்பு சபை அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள போதைப் பொருள் பாவனையை ஒழிப்பதற்கு அரசாங்கம் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது. அந்தவகையில் அரசாங்கத்தின் மேற்படித் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக நாட்டிலுள்ள சகல ஜூம்ஆப் பள்ளிவாசல்களிலும் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்றிட்டத்தினை மேற் கொள்ளும் வகையில் இலங்கை வக்பு சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேல்மாகாண கௌரவ ஆளுநரின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்டதொரு திட்டம், வக்பு சபை, முஸ்லிம் சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம், மஸ்ஜித்கள், சமயக் குழுக்கள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களால் ஒருங்கிணைக்கப்பட்டது.
அந்த வகையில் நவம்பர் மாதம் 07ஆம், 14 ஆம், 21ஆம், 28ஆம் திகதிகளில் இடம்பெறும் ஜூம்ஆப் பிரசங்கங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஒவ்வொரு தலைப்பு வீதம் நான்கு வெள்ளிக்கிழமைகளில் நான்கு தலைப்புக்களில் பிரசங்கங்களை மேற்கொள்ளுமாறு வக்பு சபை அறிவுறுத்தியுள்ளது.

எனவே சகல ஜூம்ஆப் பள்ளிவாசல்களிலும் போதை ஒழிப்பு தொடர்பான மேற்படி வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் கேட்டுக் கொள்கின்றார்.

அதன் அடிப்படையில் முதலாம் வாரம் போதைப்பொருள் அச்சுறுத்தல் – நம்பிக்கை மற்றும் மனிதாபிமானத்திற்கான ஒரு சோதனையாக இருப்பதால் போதைப்பொருள் அச்சுறுத்தலின் தீவிரத்தை ஒரு தார்மீக, சமூக மற்றும் தேசிய சவாலாக அடையாளம் காணல் தொடர்பான பிரசங்கங்களை மேற்கொள்ளல்.

இரண்டாம் வாரத்தில் குடும்பம் மற்றும் உம்மா – அடுத்த தலைமுறையைப் பாதுகாத்தலை அடிப்படையாக வைத்து ஆரம்பத்தில் தடுத்துள்கொள்வதிலும் மறுவாழ்வளிப்பதிலும் குடும்பத்தின் பிரதான வகிபங்கு பற்றி தெளிவு படுத்துதல்.

மூன்றாம் வாரத்தில் ஒற்றுமை என்பது பலம் – நம்பிக்கை, சமூகம் மற்றும் தேசத்துடன் ஒன்றாக வாழ்வது பற்றிய தெளிவை மேற்கொள்ளல். அதன்படி சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், சுகாதாரம் மற்றும் சமயங்களுக்கு இடையேயான கூட்டாளர்களுடன் ஒன்றிணைவதில் சமூகத்தின் பங்களிப்பு பற்றியதாகும்.

நான்காவது வாரத்தில் முகாமை செய்வதல்ல ஆரம்பத்தில் துடைத்தெறிதல் – செயற்பாடுகள் மற்றும் எதிர்ப்பார்ப்புக்கான அழைப்பு தொடர்பான விளக்கத்துடன் உத்வேகத்தைத் தக்கவைத்தல் மற்றும் நம்பிக்கையை நீடித்த மாற்றத்திற்கு உட்படுத்தல் தொடர்பாக தெளிவுபடுத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக சகல பள்ளிவாசல்களிலும் இத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *