கொழும்பு 12 முஹ்யித்தீன் தக்கியாவில் வருடாந்த கந்தூரி
அற்புத ஜோதி ஸூல்தானுல் ஆரிபீன் அஸ்ஸெய்யித் அஹ்மத் கபீருர் றிபாயி (றழியல்லாஹூ அன்ஹூஅவர்களின் நினைவாக
கொழும்பு – 12, றிபாய் தங்கள் ஒழுங்கையில் அமைந்துள்ள முஹ்யித்தீன் தக்கியாவில் ‘சங்கைக்குரிய றிபாய் மௌலானா யூ.பி. அஸ்ஸெய்யித் முஹம்மத் ஆசிக் தங்கள்’ அவர்களது தலைமையில் 148 வது வருட றிபாய்க் கந்தூரி தமாம் இடம் பெற்றதோடு, விருந்துபசார நிகழ்ச்சி 15/11/2025 இடம் பெற உள்ளது.
சங்கைக் குறிய ரிபாய்யி மௌலானா இந்த நிகழ்வுக்கு தலைமை வகிப்பார்.
கலிஃபதுல் ரிபாய்யி மௌலவி அல்ஹாஜ் அஹமது பாளீல் காசிமி உட்பட சாதாத்மார்கள், உலமாக்கள், அறிஞர்கள், அகில இலங்கை ரிபாய்த் தாரீக்கா சங்கத்தின் உறுப்பினர்கள் உட்பட முரீதீன்கள் கலந்து கொள்வர்.
23.10.2025 வியாழக்கிழமை மாலை கொடியேற்றம் இடம்பெற்றது.
02.11.2025 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபுடன் தமாம் நிகழ்ச்சி இடம் பெற்றதோடு,15.11.2025 ல் பெரிய கந்தூரி விருந்து உபசாரம் நடைபெறவுள்ளது.
(பேருவளை பீ.எம். முக்தார்)
