ஜனாதிபதி ஊடக விருது விழாவில் ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு இரண்டு விருதுகள்
ஜனாதிபதி ஊடக விருது விழாவில், சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளருமான றிப்தி அலி இரண்டு விருதுகளைப் பெற்று, கல்முனை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
2025 ஆம் ஆண்டின் சிறந்த புலனாய்வு செய்தியாளருக்கான (தமிழ்) விருதும், இந்த ஆண்டின் சிறந்த இணையத்தள அறிக்கையிடலுக்கான விருதும் றிப்தி அலிக்கு வழங்கப்பட்டன.
இதற்கு மேலதிகமாக, ஆண்டின் சிறந்த செய்தியாளருக்கான விருது மற்றும் ஆண்டின் சிறந்த புலனாய்வு செய்தியாளருக்கான விருது (ஆங்கிலம்) ஆகியவற்றிற்கும் பரிந்துரை செய்யப்பட்டிருந்த றிப்தி அலி, அவற்றிற்கான சிறப்புச் சான்றிதழ்களையும் இதன்போது பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

( ஐ. ஏ. காதிர் கான் )
