ஓட்டமாவடி பிரதேச சபை புதிய தவிசாளர் தெரிவு இம்மாதம் 20 ஆம் திகதி; என்.எம்.பாஹிர் புதிய உறுப்பினராக நியமனம்
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு இம்மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
தவிசாளராக செயற்பட்டு வந்த எம்.எச்.எம்.பைறூஸ் உறுப்புரிமையை இழந்த வெற்றிடத்துக்கு நூர்தீன் பாஹிர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் எம்.எச்.எம்.பைறூஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.
பின்னர் பைறூஸ் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்கி தவிசாளர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவ் விடயம் தொடர்பில் கட்சி மேற்கொண்ட சட்ட நடவடிக்கையின் பிரகாரம் பைறூஸ் தனது உறுப்புரிமையை இழந்துள்ளதாக கடந்த 31 ஆம் திகதி வெளியான வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது.
பதவி இழந்த எம்.எச்.எம்.பைறூஸின் வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினராக என்.எம்.பாஹிர் நியமனம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



(எச்.எம்.எம்.பர்ஸான்)
