எழுத்தாளர் கவிதாயினி மஸாஹிரா கனியின் இரு நூல்கள் வெளியீடு
எழுத்தாளரும் கவிதாயினியுமான மஸாஹிரா கனியின் “விடத்தல்தீவு புலவர் முஹம்மது காசிம் ஆலிம்” வரலாறு மற்றும் “வேரெழுது” கவிதைத் தொகுப்பு ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா, எழுத்தாளர் கவிஞர் மேமன் கவி தலைமையில், கொழும்பு – 10, மருதானை தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்கள கேட்போர் கூடத்தில், (09) ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்வில் கௌரவ அதிதிகளாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுத்தீன், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேஷன் மற்றும் பிரதம அதிதியாக “தினகரன் – தினகரன் வாரமஞ்சரி” பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.




( ஐ. ஏ. காதிர் கான் )
