பேருவளை நகர சபை வரவு செலவுத் திட்டத்துக்கு ஏகமனதான அங்கீகாரம்
பேருவளை நகர சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 11/11/2025 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் ஏகமானதாக அங்கீகரிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நகர பிதா எம். மபாஸிம் அஸாஹிரினால் (11/11/2025 ) முன் வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் நிர்வாகத்தின் கீழ் ( ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் ) உள்ள வேருவளை நகர சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டம் ( 2026ஆம் ஆண்டிக்கான ) சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நகர பிதா மபாஸிம் அஸாஹிர் வரவு செலவுத் திட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது கூறியதாவது 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஏகமானதாக நிறைவேற்ற ஆதரவு வழங்கிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தை கட்சி வேறுபாடின்றி அங்கீகரித்துள்ளனர். இது முழு நாட்டுக்கும் ஒரு முன்மாதிரியாகும்.இது வரவேற்கத்தக்க விடயமாகும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சியில் உள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் எந்த வேறுபாடுகளுமின்றி ஆதரவு வழங்கியமை பாராட்டத்தக்கது.
பேருவளை நகர வாழ் மக்களுக்கு சிறப்பான சேவைகளை பெற்றுக் கொடுக்க நாம் எல்லா வேற்றுமைகளையும் தூக்கி வீசி ஒரு குடையின் கீழ் ஒன்றுபட்டு செயற்படுவோம் என்றார்.
புனித உம்ரா கடமையை மேற்கொள்ள மக்காவுக்கு இன்றைய தினம் பயணமாகும் நகர சபை உறுப்பினர் ரிஹானா ஜெஸ்மினுக்கு சபையில் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
உப தலைவர் விமலசிறி சில்வா, உறுப்பினர்களான மஸாஹிம் முஹம்மத், முஷ்பிர் சாபி, செய்த் அஹமத், முகமது ஹிஷாம், எம்.என்.எம்.இர்சாத், மல்லிகா சில்வா, எதிர்க்கட்சித் தலைவர் அஸாம் பளீல், முஹம்மத் மில்ஹான், ஆகியோரினால் பல்வேறு பிரேரனைகளும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
11/11/2025 ம் திகதி பேருவளை நகர சபையின் வரவு செலவுத் திட்ட பிரேரணைகளின் பின் சரியாக முற்பகல் 11.11 மணியளவில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
( பேருவளை பீ.எம். முக்தார் )
