களுத்துறை ப்ளூ ஸ்டார் கழகத்துக்கு டெல்மன் பணிப்பாளர் ஸப்வான் அனுசரனை
களுத்துறை “புளூஸ்டார்” விளையாட்டுக் கழகம் இலங்கையின் முன்னணி உதைப்பந்தாட்ட கழகங்களுள் ஒன்றாகும்.
புளூஸ்டார் கடந்த வருடங்களில் அகில இலங்கை ரீதியாக நடைபெற்று முடிந்த ‘பிரீமியர் லீக், சுப்பர் லீக் உதைப்பந்தாட்ட போட்டிகளில் பங்கு பற்றி மேற்படி இரு கிண்ணங்களையும் சுவீகரித்து அகில இலங்கை சம்பியனாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
மேற்படி புளூஸ்டார் விளையாட்டுக் கழகத்திற்கு அனுசரணை வழங்க தொழிலதிபரும், வெள்ளவத்தை டெல்மன் தனியார் வைத்தியசாலையின் பணிப்பாளரும், முகாமையாளருமான அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ஸப்வான் முன்வந்துள்ளார்.
அதன் ஒர் அங்கமாக அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். ஸப்வான், அணித்தலைவர் முஹம்மத் பாஹிரிடம் ஜேஸி (சீருடை ) தொகுதியை வழங்கி வைத்தார்.
களுத்துறை புளூஸ்டார் விளையாட்டுக் கழகத்தில் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு இவ்வருட இறுதியில் நாட்டின் முன்னணி உதை பந்தாட்டக் கழகங்களை உள்ளடக்கி (7 பேர்) செவன் சைட் உதை பந்தாட்டப் போட்டியொன்றை நடாத்த தீர்மானித்திருப்பதாக புளூஸ்டார் விளையாட்டுக் கழக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.






(பேருவளை பீ.எம். முக்தார்)
