போருதோட்டை அல் – பலாஹ் கல்லூரி தேசிய ரீதியில் சாதனை
கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தேசிய ரீதியில் நடைபெற்று முடிந்த முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடையிலான முஸ்லிம் கலாசார – பாரம்பரிய போட்டி நிகழ்ச்சியில், நீர்கொழும்பு – போருதோட்டை அல் – பலாஹ் கல்லூரி, “அறிவுக் களஞ்சியம்” போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இவ்வெற்றி குறித்து அதிபர் எம்.யூ. பாயிஸ் குறிப்பிடுகையில், “இப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவன் எம்.ஆர்.எம். ஸைத், மாணவிகளான எம்.கே.எப். இல்மா, எம்.ஏ. ஹல்பா, எம்.என்.எப். ஆயிஷா, எம்.எல்.என். முஷ்பிரா மற்றும் பிரதி அதிபர்களான சதீஸ்கான், சிஹாமா மொஹமட், பயிற்றுவித்த ஆசிரியர் ஆசிரியைகள், ஒத்துழைத்த கல்லூரி நிர்வாகம் ஏனைய ஆசிரியர்கள், வெற்றி ஈட்டிய மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருக்கும் தனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
