மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய தரம் 5 புலமைச் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு..!
ஒரு பாடசாலை, சிறந்த அடைவுகளை பெற்றுக்கொள்ள அதிபர்,ஆசிரியர்கள் மட்டுமல்ல, அப்பாடசாலையின் பலம்மிக்க பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு மற்றும் பெற்றோர்களின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் அவசியமாகும். இதற்கு மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலயம் நல்லதோர் சான்றாகும். என கல்முனை வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் எம்எச்.எம்.ஜாபீர் தெரிவித்தார்.(10)
மருதமுனை அல்-ஹம்றா வித்தியாலய தரம் 5 புலமைச் சாதனையாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வில்,பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் எம்.எம்.முகம்மது நியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான திருமதி எம். எச்.றியாஸா,எம். எல். எம்.முதர்ரிஸ்,பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் ஐ.மர்ஸாத், பழையமாணவர் சங்க உபதலைவர் நழீம், அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
(றிபாஸ்)


