திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட சாரண ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு..!
திருக்கோவில் கல்வி வலயத்துக்குட்பட்ட சாரண ஆசிரியர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு தம்பட்டை செம்மன் புளை கனேச வித்தியாலயத்தில் நடைபெற்றது.(08)
ஆசிரிய ஆலோசகர் சதீஸ்குமார் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இந் நிழ்வில் வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர் உதயக்குமார் பிரதம அதிதியாகவும், ஆசிரிய ஆலோசகர் சித்தீக், முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எஸ். ரவீந்திரன், அதிபர் பார்தீபன், முன்னாள் அதிபர் எஸ். செய்னூல் ஆப்தீன் ஆகியோரும் கலந்து கொண்டர்.
திருக்கோவில் வலயத்திலிருந்து சுமார் நாற்பதுக்கு மேற்பட்ட பாடசாலைகளின் ஆசிரியை, ஆசிரியர்கள் கலந்து கொண்ட இப்பயிற்சி செயலமர்வில் சாரணியம், முதலுதவி, கடேட், சென்ஜோன்ஸ் போன்ற குழுக்களை பாடசாலையில் ஆரம்பிப்பது தொடர்பாக துறைசார்ந்த வளவாளர்களினால் பயிற்சிகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன
(றிபாஸ்)






