உயர்தரப் பரீட்சை நிறைவடையும் முன்பே விடைத்தாள் திருத்தும் பணி ஆரம்பம்..!
2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமானது.
இந்நிலையில் இம் முறை உயர்தரப் பரீட்சை நடவடிக்கைகள் நிறைவடைவதற்கு முன்பே விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பிக்க இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சைகள் தொடர்பாக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டபோதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்தார்.
