உள்நாடு

சர்வதேச மனித உரிமைகள் குளோபல் மிஷன் அமைப்பின் இலவச மருத்துவ முகாம் வெற்றிகரமாக நிறைவு..!

சர்வதேச மனித உரிமைகள் குளோபல் மிஷன் (International Human Rights Global Mission) அமைப்பின் பேருவளை பிராந்திய கிளை ஏற்பாடு செய்திருந்த இலவச மருத்துவ முகாம் செயற்திட்டம், ஒக்டோபர் 11, 2025 அன்று பேருவளை அல்-பாஸியதுல் நஸ்ரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

பேருவளை அணியின் தலைவர் திருமதி. பஸ்லா பகீர் அவர்களின் சிறப்பான ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், முதன்மைச் சிரேஷ்டர் பேராசிரியர் டாக்டர். மதுகிருஷ்ணன், மனித உரிமைகள் இலங்கை பிராந்திய இயக்குநர் டாக்டர். அப்துல் ரசாக், அமைப்பின் சட்ட ஆலோசகர் டி.வி. ஷங்கர், அமைப்பின் தலைமை நிர்வாகி H.E. டாக்டர் எம்.ஏ.சி. மக்சூம் JP (WI), இலங்கை பிராந்தியத் தலைவர் ஏ.ஆர்.என். அமீர் கான் மற்றும் அமைப்பின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான துணைத் தலைவர் திருமதி. எஃப். ஷிரீன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை சர்வதேச தரத்திற்கு உயர்த்தினர்.

இம்மருத்துவ முகாமில் பேருவளைப் பிரதேசத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் அடங்கலாக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்பெற்றனர். பேருவளை மற்றும் பிற பிராந்தியங்களிலிருந்து மருத்துவர்கள், பேருவளை பிரதேச அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தாதியர்கள், மருந்தாளுநர் சேவை அதிகாரிகள், கண் பரிசோதனை அதிகாரிகள், ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகள் ஆகியோர் தமது சேவைகளை வழங்கினர். மேலும், ஜாமியா நளீமியா கலாபீடம் மற்றும் இக்ரா தொழில்நுட்ப கல்லூரியின் மாணவர்கள் தொண்டர்களாக இம்முகாமில் இணைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைத்து மருத்துவர்கள், ஏனைய துறை அதிகாரிகள், பேருவளை கிளையின் அமைப்பு இயக்குநர் குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை பாராட்டி கௌரவிக்கும் வகையில், நவம்பர் 1, 2025 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பு விழா ஒன்று நடைபெற்றது. இவ்விழாவில் அவர்களது அர்ப்பணிப்பான சேவைகளுக்கு சான்றிதழ்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டு, அவர்களின் சேவைகள் பாராட்டப்பட்டு ஊக்குவிக்கப்பட்டன.

இச்சமூக சேவை முயற்சி, சமூக நலனுக்கான அமைப்பின் உறுதிப்பாட்டை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *