புத்தளம் ஹாமில்டன் கால்வாய் மேம்படுத்தல் வேலைத்திட்டம்
புத்தளம் ஹாமில்டன் கால்வாயினை மேம்பாடு செய்தல் மற்றும் உலக நகர தினத்தைக் கொண்டாடும் நிகழ்வு அண்மையில் வென்னப்புவ பிரதேச சபையில் நடைபெற்றது.
400 ஆண்டுகள் பழமையான ஹாமில்டன் கால்வாய், கொழும்புக்கும் புத்தளத்திற்கும் இடையில் படகுகளைப் பயன்படுத்தி பொருட்களை கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
எனினும் அதன் பயன்பாடு இல்லாததால், ஹாமில்டன் கால்வாய் மோசமடையத் தொடங்கியது.
இது பற்றி கருத்து தெரிவித்த பொது நிர்வாக அமைச்சர் டாக்டர் சந்தன அபேரத்ன, ஹாமில்டன் கால்வாயை நாட்டின் சுற்றுலாத் துறைக்கு பயன்படுத்தலாம் எனவும்.இந்த திட்டத்துடன் இணைந்து, ஹாமில்டன் கால்வாயை சுத்தம் செய்து இருபுறமும் தேனீ செடிகள் நடவும் திட்டமிடப்பட்டது
சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி, வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் அன்டன் குமார, புத்தளம் மாவட்ட செயலாளர் இந்திக மஞ்சுள சில்வா ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.
ஹாமில்டன் கால்வாயின் இருபுறமும் நடுகை செய்வதற்காக தேனீ செடிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
