உள்நாடு

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சஜித் பிரேமதாச சந்திப்பு..!

புதுதில்லியில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து இரு நாட்டு உறவுகளை குறித்து விரிவாக பேசினார்கள். அவருடைய உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து நமது தேசம் ‘அனைத்து வளங்களாலும் மனித திறமைகளாலும் ஆசீர்வதிக்கப்பட்டது’ என்று அவர் குறிப்பிட்டது பெரும் கௌரவமாக அமைந்து காணப்பட்டது. அவ்வாறே, இலங்கைக்கு அவர் தொடர்ந்து பெற்றுத் தரும் ஆதரவிற்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தராமனுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் புதுதில்லியில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பின் (CII) சிரேஷ்ட பிரதிநிதிகளைச் சந்தித்ததோடு, வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான பரந்ததொரு கலந்துரையாடலைக் கட்டியெழுப்ப முடிந்தது. வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பரப்புகளை அதிகரிப்பதற்கான இந்தியா-இலங்கை கூட்டுப் பொருளாதார ஆணைக்குழுவின் கீழ் வர்த்தக வசதிகளை வழங்கும் செயற்பாட்டு ரீதியான பணிக்குழுவை ஸ்தாபிப்பதற்கான யோசனையை முன்வைத்ததோடு, இந்தியத் தொழிற்துறைக்கு அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடிய இந்தியா-இலங்கை கூட்டு தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப வர்த்தக வலயத்தை இலங்கையில் உருவாக்குவதற்கும் இங்கு முன்மொழிந்தேன். மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாய பதப்படுத்தல், சேவை வழங்கல், சுற்றுலா மற்றும் குறைக்கடத்திகள் போன்ற முன்னுரிமைத் துறைகளை அடையாளம் காண்பதற்கு இலங்கை – CII வர்த்தக மன்றத்தை ஸ்தாபிப்பதற்கும் தெரிவித்தார்.

(திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *