மட்/மம/பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலத்தில் இடம் பெற்ற செலான் வங்கி மற்றும் கெபிடல் FM & TV இணைந்து நடாத்திய சிறுவர் தின நிகழ்வு..!
உலக சிறுவர் மாதத்தை முன்னிட்டு செலான் வங்கி மற்றும் கெபிடல் FM & TV இணைந்து நடாத்திய சிறுவர் தின நிகழ்வு 03.11.2025 திங்கள் அன்று மட்/மம/பூநொச்சிமுனை இக்றஃ வித்தியாலத்தில் அதிபர் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.. இதில் செலான் வங்கியின் கிழக்கு மாகாண முகாமையாளர் Mr. Rusthi Hussain அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சட்டத்தரணி Mr.பிரபாகரன் அவர்களும் கெபிடல் நிறுவன உத்தியோகத்தர்கள், காத்தான்குடி செலான் வங்கியின் முகாமையாளர் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் கதிரவன் நாடகக்குழு மூலமாக விழிப்புணர்வு நாடகம் நிகழ்த்தப்பட்டதோடு மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.




