நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய உதைபந்தாட்ட அணி செம்பியனாக தெரிவு
புத்தளம் நகர சபை மைதானத்தில் நடைபெற்ற டிவிஷன் 02 20 வயதுக்குட்பட்ட உதைபந்தாட்ட போட்டியில் நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியால உதைபந்தாட்ட அணி செம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
இறுதி போட்டியில் புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலை அணியுன் மோதி நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலய அணி 2 -1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி செம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
