அக்கரைப்பற்று பாயிஸா மகா வித்தியாலய மாணவிகள் “அல் – ஹிகாயா வல் – பைத்” போட்டியில் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை
அகில இலங்கை முஸ்லிம் பாடசாலைகளுக்கு இடையிலான
“முஸ்லிம் கலாசாரப் போட்டி – 2025” நிகழ்வுகளின் ஓர் அங்கமாக, சிரேஷ்ட பிரிவு தரம் 12 ஆம் 13 ஆம் பெண்கள் குழுவினருக்கு இடையே, “அல் – ஹிகாயா வல் – பைத்” (பாட்டும் பதமும்) “முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறப்பு” என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற போட்டி நிகழ்ச்சியில், அக்கரைப்பற்று பாயிஸா மகா வித்தியாலய மாணவிகள் குழுவினர் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டியில் நஸீஹா, ஸிமத், ஜீனத், ஸஹ்ரா, தானா, நஜ்லா, அனூப், ஸியா ஆகிய மாணவிகளே, தமது திறமைகளை வெளிப்படுத்தி, பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இப்போட்டி நிகழ்வு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திக் கிளை அனுசரணையில், கொழும்பு – மருதானை, ஸாஹிராக் கல்லூரியில் (01) சனிக்கிழமை இடம்பெற்றது.
குறித்த போட்டி நிகழ்ச்சியில், பாயிஸா மகா வித்தியாலயம் சார்பில் பங்கு கொண்ட மாணவிகளுக்கு, ஊர் மக்கள் சார்பாகவும் பாடசாலை சார்பாகவும், அதிபர் அஹமட் ஸியாத் தனது
அன்பான நன்றிகளையும், பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
( ஐ. ஏ. காதிர் கான் )
